(சோழ மன்னர்கள் -1.)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !
சோழ மன்னர்கள்
~~~~~~~~~~~~~
வட வேங்கடம், தென்குமரிக்கு இடையேயான நிலப்பரப்பே முற்காலத்தில் தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பண்டைக்காலத்தில் இதனை ஆட்சி புரிந்தோர் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர்.
இதில் தமிழகத்தின் கீழ்ப்பகுதியை தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்த அரச மரபினர் சோழர்கள் ஆவர்.
சங்க காலச் சோழ மன்னர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் முடிந்தது என்பது ஆராச்சியாளர்களின் ஆராய்வில் கண்டறியப்பட்ட ஒன்று.
இக் கடைச் சங்க காலத்திற்கு முற்பட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சோழமண்டலத்தை ஆட்சிபுரிந்த சோழமன்னர்கள் காந்தன், தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன், இளஞ்சோட்சென்னி, கரிகாலன், கிள்ளி வளவன், நலங்கிள்ளி, கோப்பெரு நற்கிள்ளி, பெருவறற்கிள்ளி, நெடுங்கை கிள்ளி, மாவளத்தான், செங்கணான், நல்லடி என்போரின் வரலாறு மிகச் சுருக்கமாகவே கடைச் சங்க நூல்களான புறநானூறு, அகநானூறு, முதலான நூல்களில் காணப்படுகின்றன.
சங்க காலத்திற்குபின் கி.பி.9 ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டதில் சோழர்கள் பற்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தரும் செய்திகள் இவர்கள் சோழநாட்டில் இருந்தார்கள் என்ற அளவில் மட்டுமே உணர்த்தும். இதற்கு காரணம் இவர்கள் தாழ்ந்த நிலையை அடைந்து பிற வேந்தருக்கு அடங்கி வாழ்ந்திருக்க வேண்டும்.
பிற்காலச் சோழர்கள்
~~~~~~~~~~~~~~~~
பிற்காலச் சோழப் பேரரசை நிறுவ முதலில் அடிகோலியவன் கி.பி. 9ம் நூற்றாண்டின் இடையில் தோன்றிய விசயாலயன் என்னும் சோழ மன்னனே ஆவான்.
சோழன் விசயாலயன் கி.பி.846-881
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குமாராங்குசன் என்ற சோழ மன்னனுக்கு புதல்வனாய் பிறந்தவன் விசயாலயன். இவ் விசயாலயன் வழித் தோன்றிய மன்னர்களே பிற்காலச் சோழர்கள் ஆவர் ..ராசராச சோழன் உள்பட…..
(ஓவியம்-ம.செ.வினுடயது..என்னால் எடுத்தாளப்பட்டுள்ளது)
இந்த வலைப்பூ சிறப்பான வெற்றிகளைப் பெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன்! நண்பர் முருகவேல் சாமிநாதன் அவர்கள் தனது கடின முயற்ச்சியால் அளிக்கும் வரலாற்று இலக்கிய விருந்தை தொடர்ந்து விரும்புகிறேன்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திரு.சுபாஷ் ஐயா!
Deleteநல்ல முயற்சி. பணி தொடர நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி திருமதி.வேதா.இலங்கா திலகம்!
ReplyDelete